Wednesday, November 24, 2010

கண்டீரா பரம்பொருளை?



நெற்கதிர்களின் அலைகளில்
உழைப்பின் உருவம்,
பூக்களின் புன்முறுவலில்
குழந்தைபோன்ற களிப்பு,
அகண்டும் குறுகியும்
அயராது வளைந்தோடும் 
ஓடைகளின் ஒலியில்
சளைக்காமல் உதவும் உள்ளம்,
அவை சேரும் நதிபதியில்
இனம் புரியாத ஆழம்
குளிர்ந்த வெண் பனித்துளியில்
சமநிலையான அன்பு,
அது படரும் உயர் குன்றை நோக்கி
திகைப்புடன் தோன்றிய மேதகைமை,
எண்ணிலா உயிரிகளில்
சிருட்டிப்பின் இரகசியம்,
 
பிரபஞ்சத்தின் ஒரு பகுதியேனும்
பாரதத்தில் பார்த்த பின்
பரம்பொருளை உணராதவரும்
உண்டோ ?


 ------

Translation:
 
Haven’t you seen the Divine?

In the waves of the golden crops -
a tangible form of effort,
In the smile of the blossoms -
A childish mirth,
In the swelling and tapering,
winding but incessantly flowing
brook’s gurgle -
an eternally helping heart,
In the wide ocean into which they flow -
a mystery unfathomable,
In the chilly white snow flakes -
tender Love with equanimity,
In the peaks on which they fall -
the majesty to watch in awe,
In the teeming multitude of life –
The mystic secret of Creation…

At least a quantum of the cosmos
Having witnessed in Bharat, but
Yet to realize the Divine -
is there anyone left?

---------------------------
PS: Had submitted this as an entry in a poetry competition ("Poetriotism") at office .  Wanted to look at a different meaning of 'patriotism' - away from the cliched chest-thumping, proud-of-the-success-stories versions and the negative critic's perspectives. India is what it is mainly because of it's Spiritual leanings.
The Tamil piece is the original and the English version, as mentioned, is meant to be the translation. 


No comments: